நுபுர் சர்மாவை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட காஷ்மீர் யூடியூபர் அதிரடி கைது!
நுபுர் சர்மாவை மிகவும் இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட காஷ்மீர் யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் வேண்டும் என்றே இந்து கடவுளை இழிவாக பேசியதால் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்தை பதிவிட்டார். இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு இடையில் நுபுர் சர்மாவுக்கு அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது.
அதே போன்று நுபுர் சர்மாவின் உருவச்சிலையின் தலையை துண்டிப்பதை போன்று டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவை யூடியூபர் பைசல் வானி வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து மீண்டும் சர்ச்சை கிளம்பியது. இதற்காக பைசல் வானி மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், வதந்தி பரப்புதல், குற்றம் கருதி மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து பைசல் வானியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Source, Image Courtesy: Polimer