பாராளுமன்றத்தில் கத்திரிக்காயை பச்சையாக கடித்து காண்பித்த பெண் எம்.பி - ஊடக கவனத்தை ஈர்க்க திட்டம் போட்டு நடந்த பிளான்!

Update: 2022-08-02 07:15 GMT

சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமெண்டில் கத்திரிக்காயை பச்சையாக கடித்து காட்டினார் திரிணாமுல் காங்கிரஸ் பெண் மம்தா எம்.பி. 

கடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல் இது போன்ற அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசை விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

நேற்று நடந்த விவாதத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ககோலி கோஷ் தஸ்திதர் பேச துவங்கினார். கடந்த சில மாதங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.600லிருந்து இப்போது ரூ.1,100 ஆக அதிகரித்துவிட்டது.

கடந்த ஓராண்டில் 8வது முறை உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியே விலை ஏறி கொண்டே போனால், காய்கறிகளை பச்சை சாப்பிட வேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறதா என்றார். பின் திடீரென ஒரு கத்திரிக்காயை எடுத்து கடித்து காண்பித்தார். அவரது செயல் அங்கிருந்த எம்.பிக்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தியது. 

Input From: Dinamalar 

Similar News