குடியிருந்த வீட்டை விற்று தேசிய கொடி - மெய் சிலிர்க்க வைக்கும் நெசவாளியின் தேசபக்தி!
ஆந்திராவில் தையல் போடாத தேசியக்கொடியை உருவாக்க ஏழை நெசவுத் தொழிலாளி ஒருவர் வீட்டை விற்று அதனை தயாரித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ஒருவர், தையல் போடாமல் கொடியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றி கண்டுள்ளார். அதற்காக தனது வீட்டையே விற்றுள்ளார்.
மேற்கு கோதாவரியிலுள்ள வேமாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி சத்யநாராயணன், மிகுந்த தேசப்பற்று கொண்டவர். நீண்ட நாட்களாக தான் ஒரு கொடி தயாரிக்க வேண்டும். அக்கொடி தையல் போடாத கொடியாக இருக்க வேண்டும், அந்தக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட வேண்டும் என கனவு கண்டு வந்தார்.
அதற்காக வீட்டை 6 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தை வைத்து தேசிய கொடியை தயாரித்துள்ளார். பின்னர் விசாகப்பட்டினம் வந்திருந்த பிரதமர் மோடியை சந்தித்து அக்கொடியை ஒப்படைத்துள்ளார்.
பொதுவாக இயந்திரங்களின் அளவு நான்கடிதான் இருக்கும் ஆனால் நமது கொடிக்கு 10 அடி அகலம் உள்ள கைத்தறி நெசவு இயந்திரத் தேவை என்பதால், முதலில் அந்த இயந்திரத்தை தயாரிக்க வேண்டியிருந்தது, பின்னர் அதைவைத்து கொடியை செய்யும் பணியில் இறங்கினேன்.
கொடியை செய்யும் போது பல சிரமங்கள் சவால்கள் இருந்தது, குறிப்பாக அசோக சக்கரத்தின் வட்டம் துள்ளியமாக அமைய வேண்டும், அதற்கு அதிக அளவில் நூல் வீணானது, ஆனாலும் ஒருவழியாக கொடி தயாரிக்கப்பட்டு விட்டது எனப் பெருமைப்பட தெரிவித்துள்ளார்.
Input From: TimesOfindia