ஆறு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை கட்டாயமாக்க டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி காவல்துறையின் தலைமையகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அமித்ஷா தண்டனையை அதிகரிக்கவும், குற்றவியல் நீதி அமைப்பை தடைய அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைக்கவும் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் இந்த கூட்டத்தின் போது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டின் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் குறித்தும் அமித்ஷா அனைத்து அதிகாரிகளுடன் விவாதித்தார்.