பிரதமர் மோடி இதை செய்துவிட்டார் என்று நினைக்க வேண்டாம் - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திடீர் பல்டி
"சிபிஐ பிரதமர் அலுவலகத்திற்கு புகாரளிக்காது என்பது உங்களின் பலருக்கு தெரியாது. அது உள்துறை அமைச்சகத்திற்கு தான் புகாரளிக்கும். சில பாஜக தலைவர்கள் சதி செய்கிறார்கள்", மம்தா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் ஊழல் விவகாரத்தில்
மத்திய புலனாய்வு பிரிவு, அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளனர்.
இது சம்மந்தமாக அக்கட்சியை சேர்ந்தவர்களின் இடங்களில் பல ரெய்டுகளை மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை நடத்தினர். அதன் மூலம் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பல கோடி ரூபாயை கைப்பற்றினர்.
மேற்குவங்க முதல்வரின் உறவினர்
மேற்குவங்க முதல்வரின் மருமகனும், எம்பியுமான அபிஷேக் பானர்ஜி நிலக்கரி ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளார். மற்றும் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நடிகை அர்பிதா சாட்டர்ஜி ஆகியோரை ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில்
அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூலை 23ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இன்று முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பித்த சாட்டர்ஜிக்கு சொந்தமான 46 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் இணைந்துள்ளது.
ரெய்டுக்கு எதிராக தீர்மானம்!
இதனால் கடும் சிக்கலில் உள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மத்திய அமைப்புகளின் நடவடிக்கைளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு 189 எம்எல்ஏக்கள் ஆதரவும், 64 எம்எல்ஏக்கள் எதிராகவும் வாக்களித்தனர். அப்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "சிபிஐ பிரதமர் அலுவலகத்திற்கு
புகாரளிக்காது என்பது உங்களின் பலருக்கு தெரியாது. அது உள்துறை அமைச்சகத்திற்கு தான் புகாரளிக்கும். சில பாஜக தலைவர்கள் சதி செய்கிறார்கள். சில பாஜக தலைவர்கள் சதி செய்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.