தொடரும் வேட்டை - பி.எஃப்.ஐ அமைப்பினர் கைது

Update: 2022-09-29 01:58 GMT

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்தியாவில் பல மாநிலங்களிலும் செயல்ப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மட்டுமின்றி இந்த அமைப்பின் துணை அமைப்பு சிலவும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் மீது பலரும் கலவரங்களை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ சோதனையில் ஈடுப்பட்டது. அதன்பின், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 27ம் தேதி மீண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனையில் ஈடுப்பட்டது.

உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் சோதனை செய்த நிலையில், நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகள் சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளதோடு அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

அந்த அமைப்பின் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை , பிரதமரை கொல்ல சதி செய்தது உள்ளிட்ட பல குற்றசாட்டுகள் அவர்கள் மீது என்.ஐ. ஏ சுமத்தியது. ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய துணை அமைப்புகளுக்கும் அவர்கள் தடை விதித்துள்ளனர்.

தமிழகத்தில் என்.ஐ.ஏ வால் கைது செய்யப்பட்ட 8 பேரை 3 நாட்கள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதனை அடுத்து, அவர்கள் 8 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை விதித்ததற்கு எதிராக பல இடங்களிலும் போரட்டங்கள் நடந்து வருகின்றன.

Source - Polimer News

Similar News