டாக்டர் உமர் அகமது இலியாஸி டெல்லியில் வசித்தும் வருகிறார். கடந்த செப்டம்பர் 22-ம் தேதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது சக நிர்வாகிகளுடன் வந்து உமர் அகமவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் பேசினர்.
இந்த சந்திப்புக்கு பிறகு ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் அருகிலுள்ள மதரசாவுக்கும் சென்று அங்கிருந்த மாணவர்களிடம் பேசினார். இதனால், மோகன் பாகவத்தை இமாம் இலியாஸி புகழ்ந்திருந்தார்.
இதையடுத்து அன்று மாலை முதல் தனக்கு கொலை மிரட்டல் வரத் தொடங்கியதாக டெல்லி காவல் துறையிடம் இமாம் இலியாஸி புகார் செய்துள்ளார். இப்புகார் மீது டெல்லியின் திலக் மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.
உமர் அகமது இலியாஸி தனது புகாரில், "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்த நாள் முதல், எனது தலையை துண்டிக்க இருப்பதாக எனக்கு பலரும் மிரட்டல் விடுக்கின்றனர்.
முதல் மிரட்டல் கொல்கத்தாவில் இருந்து வாட்ஸ் அப் எண்ணில் வந்தது. இதேவகையில், பாகிஸ்தான், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் லண்டனில் இருந்தும் மிரட்டல்கள் வருகின்றன. சிலர் தங்கள் வீடு, அலுவலக தொலைபேசி மூலமாகவும் மிரட்டுகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Input From: Hindu