உலகின் சக்தி வாய்ந்த பெண் நிர்மலா சீதாராமன்: போர்ப்ஸ் பட்டியல் வெளியானது!
ஃபோர்ப்ஸின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் வருடாந்திர பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மசூம்தார்-ஷா மற்றும் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் உள்ளிட்ட ஆறு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 36வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பட்டியலில் அவர் இடம் பெற்று வருகிறார்.
மேலும், HCLTech தலைவர் ரோஷ்னி நாடார், செபி தலைவர் மாதபி பூரி புச், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மோண்டல் இந்த பட்டியலில் உள்ளனர். பட்டியலில் 39 CEO க்கள் உள்ளனர்; 10 நாட்டுத் தலைவர்கள்; மற்றும் 11 பில்லியனர்களின் மொத்த மதிப்பு 115 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
Input From: DT