என்னை ஒருத்தனை பிடிச்சிட்டா போதுமா? ஆயிரம் பேர் இருக்காங்க: மங்களூரு குக்கர் குண்டு தீவிரவாதி ஷாரிக் சொன்ன ஷாக் நியூஸ்!
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 19ம் தேதி, ஒரு ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. குண்டு வெடிப்புக்கு திட்டமிட்ட பயங்கரவாதி முகமது ஷாரிக் என்பவன் கைது செய்யப்பட்டான்.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம் படுகாயமடைந்தார். இவ்வழக்கை, என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஷாரிக்கிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கத்ரி மஞ்சுநாத் கோவிலில் குண்டு வெடிக்க சதி திட்டம் தீட்டியதும், ஆட்டோவிலேயே வெடித்ததாக ஷாரிக் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நான் ஒருவன் மட்டுமே இதற்கு சம்பந்தப்பட்டவன் கிடையாது. என்னை போல் இன்னும் நிறைய பேர் கர்நாடகாவின் வெவ்வேறு பகுதியில் உள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் ஷரியத் ஆட்சியை நிறுவ எந்த எல்லைக்கும் செல்வேன் என்று போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
Input From: Indian Express