பாடுவதும் நடனமாடுவதும் இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல - இஸ்லாமிய திருமணங்களுக்கு கெடுபிடி!
உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நடைபெற்ற கூட்டத்தில் காசி-இ-ஷாஹர் மௌலானா ஆரிப் காஸ்மி பேசுகையில், இஸ்லாமிய திருமணங்களில் பாட்டு, நடன நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
திருமண நிகழ்ச்சிகளில் பாடி நடனமாடுவதால் அதிக பணம் செலவழிக்கப்படுகிறது. மேலும் முஸ்லிம் திருமணங்களில் நடனம், பாட்டை ஊக்குவிக்கக் கூடாது. அது இஸ்லாமிய கலாச்சாரம் இல்லை.
மேலும் இதுபோன்ற கேளிக்கை நிகழ்வுகளால் திருமணத்திற்கான செலவு அதிகரிக்கிறது. இதுபோன்ற சமூக அழுத்தங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டாம் எனக் கருதுகிறேன். மேலும், இவற்றைத் தடுப்பதால் பெண் வீட்டாருக்கான கூடுதல் நிதிச் சுமைகள் தரப்படாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
கூட்டத்தில் பல உலமாக்கள் மற்றும் மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.
Input From: timesNowNews