இடதுசாரி தீவிரவாதத்தை வேரோடு கிள்ளிய மத்திய அரசு - இவ்வளோ வேகமாக குறைந்தது எப்படி?
ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமீத் ஷா 2022, பிப்ரவரி 18 அன்று நடத்தினார். 2018-ல் 417 ஆக இருந்த தீவிரவாத சம்பவங்கள் 2021-ல் 229 ஆக குறைந்தது என்றும், 2018-ல் 91 ஆக இருந்த பாதுகாப்பு படை வீரர்களின் உயிரிழப்பு 2021-ல் 42 ஆக குறைந்தது என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு மிக அதிகமாக 2258 என்றிருந்த இடது தீவிரவாத சம்பவங்கள் 2021-ல் 509 ஆக குறைந்தது. இதன் காரணமாக 2010-ல் மிக அதிகமாக 1005 என்ற எண்ணிக்கையில் இருந்த உயிரிழப்புகள் 2021-ல் 147 ஆக குறைந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றான நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில், சச்சரவுகள் நிறைந்த பகுதிகளை பல தசாப்தங்களுக்குப் பிறகு ஆயதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுதக் காவல் படையின் நவீனமாக்கும் திட்டம் – IV-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். 4 ஆண்டுகள் சேவைகளை நிறைவு செய்த அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுதப்படைகள் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் துறையின் வேலைவாயப்பில் முன்னுரிமை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் பகுதிகள் அமைதியின்மைக்கும், வன்முறைக்கும் முன்பு ஒரு காலத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
Input from: Odisha