புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள், ஹெல்மட்டுகள்: அடுத்த லெவலுக்கு அப்டேட் ஆகும் இந்திய ராணுவம் - அசர வைக்கும் மத்திய அரசு!

Update: 2023-03-26 00:59 GMT

சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஹிம்சக்தி திட்டம் என்னும் இரண்டு ஒருங்கிணைந்த மின்னணு போர் அமைப்பு தளவாடங்களை, ஐதராபாத் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இன்று கையெழுத்திட்டுள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் திட்டத்தின் கீழ் இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.

ஹிம்சக்தி திட்டம், பிஇஎல் நிறுவனத்தின் துணை விற்பனை நிலையங்களாக செயல்படும், இந்திய மின்னணுவியல், எம்எஸ்எம்இ-க்கள் உள்ளிட்ட தொழில்களை ஊக்குவிக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் மனித நாட்கள் வேலைவாய்ப்பை இது உருவாக்கும்.

அரசின் மேக் இன் இந்தியா முன்முயற்சியுடன் நாட்டை தற்சார்பு கொண்டதாக மாற்றும் வகையில் உள்நாட்டுத் திறன்களை உருவாக்குவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்.

மேலும் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தேவைக்கேற்ப, ஆயுதப்படையினருக்கும், பிற சட்ட அமலாக்கப் பிரிவினருக்கும் உயிர்க்காக்கும் கவசங்களான புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்கள், ஹெல்மட்டுகள் ஆகியவற்றை மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. இந்த கொள்முதல் தேவையான அனைத்து பரிசோதனைகள் மற்றும் அங்கீகாரத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய ராணுவம் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார் கொள்முதல் செய்யும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்கள் மற்றும் ஹெல்மட்டுகளின் தரம் குறித்து புகார் எழுந்த நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்புக்கான இந்திய தேசிய நிறுவனம் புல்லட் ப்ரூஃப் ஹெல்மட்டுகளின் தரம் அனுமதிக்கப்பட்ட அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Input From: Latestly

Similar News