அணு சக்தியை இப்படியும் பயன்படுத்தலாம் எனக்காட்டிய இந்தியா - அமெரிக்கா, பிரான்ஸ்சுக்கு அடுத்து நம்ம தான் கெத்து!

Update: 2023-04-12 01:19 GMT

 இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணுசக்தி ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 9% மின்சாரம் பங்களிக்க வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். 

2030ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தித் திறனை எட்டுவது, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்க்கு அடுத்தபடியாக இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய அணுசக்தி உற்பத்தியாளராக உயர்த்துவது ஆகிய இரண்டும் அணுசக்தித் துறை வகுத்துள்ள மற்ற இலக்குகள் என்று  கூறினார்.

இந்த விரைவான முன்னேற்றத்திற்கான பெருமை பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சேரும் என்று குறிப்பிட்டார். அவர் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரே முறையில் 10 உலைகளை அங்கீகரிக்கும் முடிவை எடுத்ததோடு பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியின் கீழ் அணுசக்தி நிறுவல்களை உருவாக்க அனுமதித்தார்.

இதன் விளைவாக, இன்று இந்தியா செயல்படும் உலைகளின் எண்ணிக்கையில் உலகில் ஆறாவது இடத்தில் உள்ளது. கட்டுமானத்தில் உள்ளவை உட்பட மொத்த உலைகளின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மோடி ஆட்சியின் தனிச்சிறப்பு என்னவென்றால், முதல் முறையாக, அணு ஆற்றல் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக, வேளாண்துறையில் ஆப்பிள் போன்ற பழங்கள் மற்றும் வேளாண் பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பதற்காக பயன்படுகிறது.

மருத்துவத் துறையில் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சையில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்காக உதவுகிறது. அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான வழியை இந்தியா உலகிற்குக் காட்டியுள்ளது என்றார்.

Input from: swarajyamag

Similar News