காங்கிரஸ் ஆட்சியை விட பல படி மேலே செய்திருக்கும் பாஜக : ஆதாரங்களை அடுக்கும் மத்திய அமைச்சர்!

Update: 2023-06-20 02:24 GMT

காங்கிரஸ் அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுக் காலத்தில் 6 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் அளித்த நிலையில் 2014-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசு 9 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மோடி அரசின் 9 ஆண்டுக் காலத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிய 6 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒவ்வொரு முகாமின் போதும் 70,000-க்கும் மேற்பட்ட பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் 6,02,045 மத்திய அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டு காலத்தில் 8,82,191 மத்திய அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக ஜிதேந்திர சிங் கூறினார்.

2004-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை மத்திய குடிமைப் பணித் தேர்வாணையம் 45,431 பேரை தேர்வு செய்திருந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 50,906 பேர் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2,07,563 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போதைய அரசு 4,00,691 பேரை தேர்வு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை ரயில்வே தேர்வு வாரியம் 3,47,251 பேரை தேர்வு செய்த நிலையில், தற்போதைய அரசு 4,30,592 இளையோருக்கு அரசு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Input From: NewsOnAir

Similar News