புற்றுநோய் செல்களைத் துல்லியமாக அழிக்கும்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டெக்னாலஜி!
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மெடிக்கல் லீனியர் ஆக்சிலரேட்டர் (லினாக்) கருவி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வருகிறது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான, பயன்பாட்டு நுண்ணலை மின்னணுப் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக்கான சங்கம் இதனை உருவாக்கியுள்ளது. இது சுகாதாரத் துறையில் உள்நாட்டு தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இதுவரை இத்தகைய நான்கு கருவிகளை உருவாக்கியுள்ள இந்த ஆராய்ச்சி சங்கம் முதல் கருவியை சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திற்கு வழங்கியது.
இரண்டாவது கருவியைக் கொல்கத்தாவின் தாகூர்புகூர் பயிற்சி நிறுவனத்திற்கும் மூன்றாவது கருவியை சண்டிகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கியது. நான்காவது கருவி அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கோவிட் தொற்றுநோய் காரணமாக சவால்கள் இருந்தபோதும், 2020-21 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையின் 9.6% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித்திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு உதவியுள்ள மத்திய அரசின் கொள்கை காரணமாக இது சாத்தியமானது.
Input From: ANI