தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடாக இருந்து தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது!
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவபவராக இருந்து இந்தியாதொழில்நுட்பத்தின் உற்பத்தியாளராக மாறியுள்ளது மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் என்பது நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது ஆகும்.
டிஜிட்டல் பொருளாதாரத்தையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கையும் விரிவுபடுத்த விரும்புகிறோம். 2014-ம் ஆண்டுக்கு முன், டிஜிட்டல் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-3.5% ஆக இருந்தது.
இப்போது 10% ஆக உள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20%-ஆக ஆக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவபவராக இருந்து, புதிய இந்தியா தொழில்நுட்பத்தின் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் இல்லாத பிரிவே இல்லை. கடந்த 6-7 ஆண்டுகளில் உருவான புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோரால் நம் நாடு உலகம் முழுவதும் மரியாதையைப் பெற்றுள்ளது” என்றார்.
எஸ்ஐசிசிஐ போன்ற தொழில் அமைப்புகள் இந்தியாவின் தொழில்நுட்பப் பயணத்தில் அளித்த ஆதரவையும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எடுத்துரைத்தார். “கடந்த 9 ஆண்டுகளில், தொழில்நுட்பத்தில் கணிசமான தூரம் பயணித்துள்ளோம். கடின உழைப்புக்குப் பிறகு, உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை அடைந்துள்ளோம்.
புதிய கண்டுபிடிப்புகளில் கடந்த 9 ஆண்டுகளில் திறனையும், நம்பிக்கையையும் வளர்த்துள்ளோம். தொழில் அமைப்புகள் இந்த இலக்கை அடைய அரசுக்கு ஆதரவளித்துள்ளன என்று கூறினார்.
Input From: ANI