கேரளாவில் பொதுமக்களும் தேவாலயங்களும் லவ் ஜிஹாத் குறித்து கவலை! உண்மையை ஒப்புக்கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள்!

Update: 2021-03-31 01:15 GMT

கேரளா உயர்நீதிமன்றம் லவ் ஜிகாத் குறித்து நிறைய தீர்ப்பு கொடுத்துள்ளது. நீண்ட காலமாக பாஜக மட்டும் பேசி வந்தத நிலையில், கிருஸ்துவ குடும்பங்கள் நிறைய பாதிக்கப்பட்டு, பின் அவர்கள் இது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.  

"லவ் ஜிஹாத் என்பதெல்லாம் பொய், அவ்வாறு எதுவுமே கிடையாது. காலம்காலமாக அரசியலுக்காக பரப்பும் பொய் பிரச்சாரம் என மக்களை ஏமாற்றி வருகின்றனர். நிச்சயமாக நம்மில் ஒவ்வொருவரும் இந்த உபதேசங்களை காது கிழிந்து போகும் அளவிற்கு கேட்டிருப்போம்.

"லவ் ஜிஹாத் நடப்பது உண்மை தான் என கேரள காங்கிரஸ் தலைவர் கே .சி.மணி ஒப்புக்கொண்டு, இது குறித்த யதார்த்த நிலவரத்தை பேசியுள்ளார்.

இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர பெரிய கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்"  என கேரள கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை ஜேக்கப் பலக்கப்பிள்ளி, மனோரமா செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

மேலும் "லவ் ஜிஹாத் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று பினராயி விஜயன் சொல்கிறார். தனது அரசியல் அஜெண்டா காரணமாக அவர் அப்படி கூறுகிறார். பொதுமக்களும் தேவாலயங்களும் லவ் ஜிஹாத் குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்த பிரச்சனையை தீர்க்க அரசும் அரசியல் கட்சிகளும் கடைமைப்பட்டுள்ளன"  என ஜேக்கப் பலக்கப்பிள்ளி கூறியுள்ளார். 

Similar News