அஸ்சாம் வாக்குபதிவு இயந்திரம் குறித்து வெளியாகும் வதந்தி! சம்பவம் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தும் அறிக்கை!
அஸ்ஸாமில் பாஜக வேட்பாளர் ஒருவரது காரில் இருந்து வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரட்டாபாரி என்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 4 தேர்தல் பணி அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யவும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,
ரதபாரி (எஸ் சி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண். 149 இந்திரா எம் வி பள்ளியை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் 2021 ஏப்ரல் 1 அன்று துரதிருஷ்டவசமான விபத்து ஒன்றில் சிக்கினர். தலைமை அதிகாரி மற்றும் மூன்று தேர்தல் அலுவலர்கள் இதில் அடங்குவர். காவலர் ஒருவர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவரும் உடன் இருந்தனர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரிகள் ஏபிஎஸ்ஐ லுஹித் கோஹைன் தலைமையிலான ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்போடு பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். பலத்த மழையின் காரணத்தால் சாலைகளில் மண் தேங்கியிருந்தது.
மாவட்டத்தின் தொலைதூர பகுதிகளை கரிம்கஞ்சோடு இணைக்கும் ஒரே முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை 8, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் திரும்பிக் கொண்டிருந்ததால் சுமார் 1300 வாகனங்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது.
மேற்கண்ட தேர்தல் குழுவினர் நீலம் பஜாரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, துணை ஆணையர் அலுவலகத்தின் தேர்தல் பிரிவால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனம் 2021 ஏப்ரல் 1 அன்று இரவு சுமார் 9 மணியளவில் பழுதடைந்தது. வண்டியிலிருந்து இறங்கிய அதிகாரிகள் பகுதி அதிகாரியான திரு அஜோய் சூத்திரதாருக்கு தகவல் அளித்தனர். பகுதி அதிகாரி வேறு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், தாங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்திருந்த காரணத்தால், அதை ஒப்படைக்க வேண்டிய மையத்தை விரைவில் அடைய விரும்பி தாங்களே மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.