தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை போடணுமாம்! இந்தியாவின் திறன் அறியாமல், அறிவுரை சொல்ல வந்து அசிங்கப்பட்ட ராகுல்காந்தி!

Update: 2021-04-11 03:24 GMT

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராகுல் காந்தி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நம்முடைய நாடு தடுப்பூசிக்கு பற்றாக்குறையாக இருக்கும் போது, ஏன் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கிறது எனத் தெரியவில்லை. இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துங்கள், நாட்டில் தேவையுள்ள ஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் மருந்து உற்பத்தி திறன் பற்றி தெரியாமல், அரசை குறை கூற வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு கடிதம் எழுதியது தெரிய வருகிறது.

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை பத்து கோடியை நெருங்கி வருகிறது. உலகில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போட்ட அமெரிக்காவை முந்தி இருக்கிறோம். எந்த வித தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் தினசரி இலக்கு 50 இலட்சம் ஆகும் போது இது 9 நாளுக்கு மட்டுமே போதும். உற்பத்தி, கொள்முதலை நிச்சயம் இரு மடங்காக்க வேண்டும். புதிய தடுப்பூசிகளையும் அனுமதிக்கலாம்.

முதல் இரு மாதங்கள் போடப்பட்ட சராசரியும், இப்போது உள்ள சராசரியும் ஒப்பிட்டால் நாம் பல படிகள் உயர்ந்து உள்ளோம். கோவாக்சின் போடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அறிவியலுக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக நிலைப்பாடு எடுத்தவர்கள், கூச்சமே இல்லாமல் தடுப்பூசி பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. 

Similar News