புதிய தலைமை தேர்தல் ஆணையர் பதவியேற்பு: குடியரசுத் தலைவர் உத்தரவு!

Update: 2021-04-13 11:39 GMT

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்து வந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய த,லைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திராவை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் எவ்வித பக்கச்சார்பும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது. அப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ளவருக்குப் பொறுப்புகள் அதிகம். நாட்டிலேயே மிக முக்கிய பதவிகளில் ஒன்றாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி கருதப்படுகிறது. இந்தப் பதவியில் உள்ளவர்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மிகக் கூர்மையாக நாடு முழுவதும் கவனிக்கப்படும்.


இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சுஷில் சந்திரா முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இவர் 2022ம் ஆண்டு மே 14ம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக செயல்படுவார். இவர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. இருப்பினும், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்று வரும் இந்த நிலையில், சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார்.

Similar News