எதிர்காலத் தேவை மற்றும் உலகத் தரத்தை பூர்த்தி செய்யும் புதிய கல்விக் கொள்கை!

Update: 2021-04-14 12:07 GMT

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனம் (PIB) இந்த கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல்மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.


 இந்தியாவின் புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்காலத்திற்கான தேவை மற்றும் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். "ஜனநாயகத்தின் தாயாக இருப்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. ஏனெனில் அதன் மதிப்புகள் நமது சமூக வாழ்க்கையில் பொதிந்துள்ளன" என்று மோடி இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசிய கருத்தரங்கில் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் உரையாற்றினார்.



 மத்திய அரசு கடந்த 2020 ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கையை (NEP) வெளியிட்டது. "தேசிய கல்வி கொள்கை எதிர்காலம் மற்றும் உலகளாவிய அளவுருக்கள் படி உருவாக்கப்பட்டுள்ளது" என பிரதமர் கூறினார். 'ஆத்மனிர்பாரத்' எனும் சுயசார்பு பாதையில் இந்தியா நடந்து செல்லும்போது திறமையான இளைஞர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார். "சுதந்திரத்திற்குப் பிறகு நமது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் முன்னோக்கி எடுத்துச் செல்ல பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளார்" என்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் மோடி கூறினார்.

Similar News