கைவிரித்த லோக்கல் நிறுவனங்கள்! 100 MT ஆக்சிஜனை மஹாராஷ்டிராவிற்கு வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்!

Update: 2021-04-16 01:00 GMT

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தனது ஜாம்நகர் உற்பத்தி அலகிலிருந்து 100 MT ஆக்சிஜனை மஹாராஷ்டிராவிற்கு வழங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். 

ஆக்சிஜன் பெருமளவில் தேவைப்படும் ஸ்டீல் உற்பத்தியாளர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை தங்களது உற்பத்தி பாதிக்காதவாறு ஆக்சிஜனை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆக்சிஜன் தயாரிப்பாளர்கள் தங்களது உற்பத்தி அளவை அதிகரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

ஆக்சிஜன் சப்ளையில் உதவுமாறு மஹாராஷ்டிரா மாநில அரசு மத்திய அரசினை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் கீழ் போர்கால ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மஹாராஷ்டிராவில் நாளொன்றுக்கு 50ஆயிரம் நபர்களுக்கு குறைவில்லாமல் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவ அமைப்பே விழிபிதுங்கி நிற்கிறது. மிகவும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உள்ளூர் நிறுவனங்கள் ஆக்ஸிஜன் விற்பனையை கொள்ளை அடிக்க திட்டமிட்ட நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் தாமாக முன்வந்து 100 MT ஆக்சிஜனை மஹாராஷ்டிரா அரசுக்கு வழங்கியுள்ளது.

கார்பரேட் நிறுவனம் என்று சொல்லி, எதற்கெடுத்தாலும் அம்பானியை வம்புக்கு இழுக்கும் நிறுவனத்தால் தான், இவ்வளவு பெரிய உதவியை குறுகிய நேரத்தில் செய்ய முடிந்துள்ளது.

வெளிநாடுகளில் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவார்கள், மில்லியனர்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். ஏனெனில் அவர்களால் தான் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டுமே போராட்டம் வரும்போதெல்லாம், முதலில் எதிர்க்கப்படுவது நாட்டின் பொருளாதரத்தில் பங்காற்றும் தொழில் முனைவோர் மட்டுமே. 

Similar News