மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 109.75 லட்சம் விவசாயிகள் ரூ.1.38இலட்சம் கோடி பெற்று சாதனை!

Update: 2021-05-14 01:30 GMT

நடப்பு ராபி சந்தை பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள்முதல் அளவு, கடந்தாண்டின் இதே காலத்தை விட 35 சதவீதம் அதிகரித்துள்ளது. நடைபெறும் 2021-22ம் ஆண்டு ராபி பருவத்தில், வட மாநிலங்களில் கோதுமை கொள்முதல் சுமூகமாக நடக்கிறது.

கடந்த 10ம் தேதி வரை 341.77 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 252.51 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ராபி கொள்முதல் மூலம் சுமார் 34.57 லட்சம் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.67,499.98 கோடி பெற்றுள்ளனர்.

2020-21 காரிப் நெல் கொள்முதலும் தொடர்ந்து சுமூகமாக நடைபெறுகிறது. காரிப் மற்றும் ராபி பயிர் இணைந்து 732.74 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 109.75 லட்சம் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1,38,341.11கோடி பெற்றுள்ளனர்.

மேலும், மாநிலங்களின் வேண்டுகோள்படி காரீப் மற்றும் ராபி பருவத்தில் 107.37 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10ம் தேதி வரை 6,51,493.99 மெட்ரிக் டன் பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, மைசூர் பருப்பு, நிலக்கடலை, கடுகு மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை ரூ.3,414.20 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு கொள்முதல் செய்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் 3961 பேரிடமிருந்து, கடந்த 10ம் தேதி வரை, 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் ரூ.52.40 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News