ஆண்டுக்கு 12 சதவிகிதம் அதிகரிக்கும் ஜிஎஸ்டி வசூல்: ஸ்திரமான வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்!
சரக்கு மற்றும் சேவை வரி 2023 மே மாதத்தில் ரூ.1,57,090 கோடி அளவிற்கு வசூலானது: ஆண்டுக்கு ஆண்டு 12 சதவீதம் அதிகரிக்கிறது.
இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.28,411 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.35,828 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.81,363 கோடியும் அடங்கும்.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து ரூ.35,369 கோடியை மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கும், ரூ.29,769 கோடியை மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கும் மத்திய அரசு அளித்துள்ளது.
2023 மே மாதத்தில், வசூல் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டின் இதே மாதத்தைவிட 12 சதவீதம் அதிகமாகும். இம்மாதத்தில், சரக்குகள் இறக்குமதி மூலமான வருவாய் 12 சதவீதம் அதிகரித்தது. உள்நாட்டு பரிவர்த்தனை மூலமான வருவாய் கடந்த ஆண்டின் இதே மாதத்தைவிட 11 சதவீதம் அதிகரித்தது.
தமிழ்நாட்டில் 2022 மே மாதத்தில் ரூ.7,910 கோடி அளவிற்கும் 2023 மே மாதத்தில் ரூ.8953 கோடி அளவிற்கும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யப்பட்டது.
இது கடந்த ஆண்டின் மே மாதத்தைவிட நடப்பாண்டு மே மாதத்தில் 13 சதவீதம் அதிக அளவிற்கு சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் 2022 மே மாதத்தில் ரூ.181 கோடி அளவிற்கும், 2023 மே மாதத்தில் ரூ.202 கோடி அளவிற்கும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு மே மாதத்தைவிட நடப்பாண்டு மே மாதத்தில் 12 சதவீதம் அதிக வரி வசூல் செய்யப்பட்டது.
Input From: NIC