ஜிஎஸ்டி வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 13% வளர்ச்சி: 2வது முறையாக ரூ 1.6 லட்சம் கோடிக்கு மேல் வசூல்!

Update: 2023-04-02 01:52 GMT

மார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,60,122 கோடி, இதில் சிஜிஎஸ்டி ரூ.29,546 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ37,314 கோடி, ஐஜிஎஸ்டி ரூ 82,907 கோடி செஸ் வருவாய் ரூ.10,355 கோடி. நடப்பு நிதியாண்டில் நான்காவது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ1.5 லட்சம் கோடியைத் தாண்டி ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து இரண்டாவது அதிகபட்ச வசூலை பதிவு செய்துள்ளது. இந்த மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஐஜிஎஸ்டி வசூலை கண்டுள்ளது.

ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ 33,408 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ28,187 கோடியும் வழக்கமான தீர்வாக அரசு வழங்கியுள்ளது. தீர்வுக்குப் பிறகு மார்ச் 2023ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ 62,954 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ 65,501 கோடியும் ஆகும்.

2023 மார்ச் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 13% அதிகமாகும். மார்ச் 2023 இல் ரிட்டர்ன் தாக்கல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த வசூல் ரூ18.10 லட்சம் கோடியாகவும், முழு ஆண்டுக்கான சராசரி மொத்த மாத வசூல் ரூ1.51 லட்சம் கோடியாகவும் உள்ளது. 2022-23ல் மொத்த வருவாய் கடந்த ஆண்டை விட 22% அதிகமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ 8,023 கோடி வசூலாகியிருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது ரூ.9,245 கோடியாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி 15.24% ஆகும்.

புதுச்சேரி கடந்த ஆண்டின் மார்ச் மாத வசூலான ரூ.163 கோடியைவிட, இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ 204 கோடி வசூலாகியுள்ளது. இது 24.78% அதிகமாகும்.

Input From: Modi India

Similar News