தனியாரிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள தடுப்பூசிகள் 1.45 கோடி: மத்திய அரசின் தகவல்!

Update: 2021-07-12 12:38 GMT

இந்தியாவில் தற்பொழுது இரண்டாவது அலை வேகம் குறைந்து இருக்கிறது. மேலும் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் அதற்கு தகுந்தவாறு மக்களை தயார் படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் தடுப்பூசி விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியமாகும். இதற்காக மத்திய அரசை தன்னுடைய சொந்த செலவில் தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு அவற்றை பகிர்ந்து கொடுத்து மக்களுக்கு முழுவதுமாக செலுத்த படுவதற்கான ஒரு வழியை வகுத்துக் கொடுக்கிறது. 


மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகளை இலவசமாக மக்களுக்கு செலுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்தாலும் அவற்றைப் போடுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவது கிடையாது. காரணம், அவர்களிடம் தற்போது பொருளாதார ரீதியாக பணப்பற்றாக்குறையை ஒரு விஷயமாக இருந்து வருகின்றது.

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் பயன்படுத்தப்படாமல் 1.54 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் கூறுகையில், "அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 38.86 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 63,84,230 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. 


மீதம் சுமார் 1.54 கோடி டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் பயன்படுத்தப்படாமல் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசே இலவசமாக மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கும் திட்டத்தை ஜூன் 21-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 3 கோடிக்கும் அதிகமான மக்கள் குணமடைந்துள்ளனர்" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News