இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசியின் விலையில் மாற்றம் ஏற்படுமா? மத்திய அரசு கோரிக்கை!

Update: 2021-04-27 12:34 GMT

கொரோனாவின் இரண்டாவது கட்ட அலையின் விளைவுகள் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் உச்சத்தை தொட்டுள்ளது. ஆகவே இவற்றை தவிர்ப்பதற்காக தடுப்பூசிகள் அதிக அளவில் கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படும் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு, மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் ஆக்சிஜன் சப்ளை மற்றும் பிறர் மருந்து உபகரணங்களை உள்நாட்டில் இருந்தும் மேலும் பல்வேறு வெளிநாடுகளின் உதவியுடன் மத்திய அரசு தங்களுடைய முழு முயற்சியை காட்டியுள்ளது.


 இந்தியாவில் மே 1ம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும்பொழுது அதன் தேவை அளவுக்கு அதிகமாக தான் இருக்கும். இந்நிலையில் மத்திய அரசு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஒரு கோரிக்கை ஒன்றையும் முன் வைத்துள்ளது. அது என்னவென்றால் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளது.


அதன்படி, கோவாக்ஸின் மருந்தை, தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியை மாநிலங்களுக்கு ரூ.600 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என்ற விலையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே போல், கோவிஷீல்டு தடுப்பூசி மாநிலங்களுக்கு ரூ.400 என்ற விலைக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 என்ற விலையில் வழங்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்தது.

அதே சமயம் மத்திய அரசுக்கு ரூ. 150 என்ற விலையிலேயே இரு தடுப்பூசிகளும் வழங்கப்படும் எனவும் இந்த நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை உயர்வுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், தங்களுடைய தடுப்பூசியின் விலையை குறைக்குமாறு நிறுவனங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதை அடுத்து, தடுப்பூசியின் விலையை குறைக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும் என பல தரப்பிலிருந்து எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Similar News