இந்தியாவில் கொரோனாவில் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் சுமார் புதிதாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய நாட்களில் பாதிக்கப்படுவோர் சுமார் 4 லட்சத்தில் இருந்தது. ஆனால் தற்சமயம் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்த வந்த நிலையில், இறப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகத்தான் இருந்துவருகிறது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,386 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் நாட்டில் 4,106 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த ஒரே நாளில் 3,78,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வடைந்து உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 460 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது. இந்தியாவில் இதுவரை 31,64,23,658 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலை தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.