முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தான் 98% பாதுகாப்பு!

Update: 2021-07-03 12:43 GMT

உலகம் முழுவதும் தற்போது தடுப்பூசி குறித்து ஒரு நேர்மறையான எண்ணம் உருவாகி உள்ளது மேலும் அனைத்து மக்களும் தங்களுக்கு தடுப்பூசி சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். உலக சுகாதார அமைப்பு நோய் தொற்றுக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று கூறியுள்ளது நினைவு கூறத்தக்கது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் ஒரு சில மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசி திருத்திக் கொண்டால் போதும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.


கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தொற்று பாதிப்பால் உயிருக்கு ஆபத்தில்லை என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் தான் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் V.K.பால் அவர்கள் தெரிவித்தார்.


மேலும் முன்களப் பணியாளர்களான போலீசாரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 4 ஆயிரத்து 868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்ததும், தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35,856 பேரில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது. ஆனால் 2 டோஸ்களும் போட்டுக்கொண்ட 42 ஆயிரத்து 720 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 2 பேர் மட்டுமே பலியானது தற்பொழுது கண்டுபிடிக்கப் பட்டது. இதை சுட்டிக்காட்டிய V.K.பால், போலீசார் அதிக ஆபத்தான சூழலில் பணியாற்றுவதால் அவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி, ஒரு டோஸ் தடுப்பூசி 92% பாதுகாப்பானது என்றும், 2 டோஸ்கள் 98% பாதுகாப்பானது என்றும் தெரியவந்துள்ளது என்று கூறினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

Similar News