வந்தே பாரத் வருவதற்கு முன்னரே இவ்வளவா? 2022-23 நிதியாண்டில் இந்திய ரயில்வே ஈட்டிய வருமானம்!
2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14 நிதி ஆண்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் இது 9 மடங்கு அதிகம் ஆகும்.
தற்போது மத்திய அரசு, நவீன வசதிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆகஸ்ட் 2023 க்குள் 75 வந்தே பாரத் ரயில்களை கொண்டு வர மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து படுக்கை வசதியைக் கொண்ட 200 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ரயில்வே துறை மேம்பாட்டுக்கு மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களுக்கு ஏற்ப வருவாயும் அதிகரித்துள்ளது. இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில் சாதனை அளவாக ரூ. 2.40 லட்சம் கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது அதன் முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.49,000 கோடி அதிக வருவாய் கண்டுள்ளது.
2022-23-ம் நிதியாண்டில் சரக்கு வருவாய் 15 சதவீதம் அதிகரித்து ரூ. 1.62 லட்சம் கோடி கிடைத்துள்ளது. பயணிகள் வருவாயைப் பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவாக 61 சதவீதம் அதிகரித்து ரூ. 63,300 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
Input From: NewsOnair