கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகத்தைத் தாக்கி, பல சக்தி வாய்ந்த நாடுகளை கூட ஆட்டம் காண வைத்தது. சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதால் சுற்றுலாத் துறையானது பெருமளவு பாதிப்பை சந்தித்தது. உலகெங்கிலும் பயணம் செய்வது பலரின் நீண்டகால கனவாக இருந்து வருகிறது. ஆனால் இந்த வைரஸ் காரணமாக ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், ரஷ்யா ஒரு புதிய வகை சுற்றுலாவை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு தடுப்பூசி சுற்றுலாவுக்கான வளர்ந்து வரும் தேவை இந்தியாவில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அதற்கான இடமாக, ரஷ்யா தற்பொழுது மாறியது வருகிறது. இந்தியர்கள் பயணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
எனவே இவர்களுக்காக தற்பொழுது சுற்றுலாவை வைத்து பிறகு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதாவது சுற்றுலா செல்ல விருப்பம் உள்ளவர்களும் மற்றும் தடுப்பூசி போட எண்ணம் உள்ளவர்கள் ஆகியோர் இதில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து இந்த சுற்றுலா தளத்தில் நீங்கள் பங்கேற்கலாம்.
துபாயை தளமாகக் கொண்ட பயண நிறுவனம் டெல்லியில் இருந்து மாஸ்கோவிற்கு 24 நாள் சுற்றுலா தொகுப்பு பயணத்தை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன் கீழ், விருப்பம் உள்ள இந்திய பயணிகளை ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்வார்கள். அவர்களுக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி, சான்றிதழ்களையும் வழங்குவார்கள்.
பயணிகள் இரண்டு டோஸ்களுக்கு இடையில் இடைவெளியைக் கழிக்க 20 நாள் சுற்றுலா தொகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பு ரூ. 1.29 லட்சம் மற்றும் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான செலவு உட்பட அனைத்தையும் உள்ளடக்கும்.