நாட்டுப்பற்றை ஊட்டும் பிரதமரின் கடிதம்... அதுவும் 30 லட்சம் மாணவர்கள்... தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்கள்...

Update: 2023-07-06 05:30 GMT

பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் இந்தியாவில் ஆண்டுதோறும் பொது தேர்வை எதிர்கொள்ளும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சேர்ந்த மாணவ மாணவிகள் பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய தேர்வு பயத்தை போக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே பரிக்‌ஷா பே சார்ச்சா இன்று நிகழ்ச்சி இருந்து வருகிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவர் எப்படி தேர்வை பயமின்றி எதிர்கொள்வது, அதற்கான ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் மற்றும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான இந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்களின் தலைமையின் கீழ் நேரடியாக குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. 


பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் ஆர்வம் மிக்கவர். குறிப்பாக ஆண்டுதோறும் பள்ளி இறுதித்தேர்வை எழுதப்போகும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவது எப்படி என்று ஆலோசனை வழங்குவார். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் தங்களை முன்வைத்து பதிவு செய்து கொள்கிறார்கள். அதில் பதிவு செய்த மாணவர்களை உயர்கல்வித்துறை தேர்வு செய்து பல லட்சக்கணக்கான மாணவர்களை பிரதமர் மோடியுடன் உரையாற்றும் வாய்ப்பை பெற்று தங்களுடைய சந்தேகங்களை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளின் பெயர், முகவரியை திரட்டி அவர்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்துடன் கடிதம் எழுதுகிறார். அந்த கடிதம் முழுவதும் நாட்டுப்பற்றை ஊட்டுவதாகவே அமைந்துள்ளது. இந்தியாவின் உன்னதமான வளர்ச்சிக்கு 5 முக்கிய கொள்கைகளை கடைபிடிக்க வலியுறுத்தி இருக்கிறார். இதில் குறிப்பாக பிரதமரின் கையெழுத்து அடங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றுகளும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் சுமார் 1 லட்சம் பேர் அடங்குவார்கள். இவர்களும் விரைவில் உன் பிரதமர் மோடி அவர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதத்தை பெற இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாத ஒவ்வொரு மாணவர்களின் தாய் மொழியிலும் இந்த கடிதம் எழுதப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy:News

Tags:    

Similar News