கர்நாடகா : ஹுப்ளியில் காவல் நிலையத்தை சரமாரியாக தாக்கிய 40-பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
கர்நாடகா ஹுப்ளியில், 'ராம்' என்பவர் இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இஸ்லாம் மதம் மீது சர்ச்சை கருத்து வெளியிட்ட 'ராம்' என்பவரை, உடனடியாக கர்நாடகா காவல்துறை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.
காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில், இஸ்லாமியர்கள் பலர் காவல் நிலையத்தை முற்றுகையிடனர். பின்னர் போலீசாருக்கும் முற்றுகையில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றவே அப்பகுதியில் கலவரம் வெடித்தது. முற்றுகையிட்ட பலர் காவல் நிலையத்தை தாக்கி சேதப்படுத்தினர்.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து "உரிய விசாரணை நடத்தப்படும்" என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். இதனையடுத்து காவல்துறை, கலவரத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்துள்ளது.
இச்சம்பவத்தால், ஹுப்ளி நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.