தமிழ் ஊடகங்கள் இதனை சொல்லாது! உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மருத்துவ கருவிகளை வாங்க மத்திய அரசு உத்தரவு! 4000 கோடி மிச்சமாகும்!
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மருத்துவ கருவிகளை தரமான தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுநாள் வரை அவை இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
இதன் மூலம் நேரடியாக ரூபாய் 4000 கோடிகள் அளவிற்கு இறக்குமதிகள் குறைந்து அந்த ஆர்டர்கள் தரமான மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
அவை மீண்டும் தங்களது சப் காண்ட்ராக்டாளர்கள், ஜாப் வொர்க் செய்பவர்கள் என பலருக்கும் ஆர்டர்களை வழங்குவார்கள். ஆங்காங்கே உள்ளூர் மக்கள் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். Multiplier effect என்பதாக இதன் தாக்கம் பொருளாதாரத்தில் உணரப்படும்.
இந்த 4000 கோடிகள் என்பது மிகச்சிறிய தொடக்கம் மட்டுமே. எதிர்காலத்தில் இது தொடர்ந்து விரிவுபடுத்தப்படும். தன்னிறைவு பெற்ற இந்தியா உருவாக வழிவகுக்கும்.
அதே போல, மூளைக்கு ரத்தத்தை முறையாக செலுத்துவதற்கு பலூனிங் என்ற முறையின் வாயிலாக ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்வதில் ரத்தத்தின் போக்கை கட்டுப்படுத்தும் விதமாக முதன்முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட் கருவியையும், இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை குணப்படுத்துவதற்கான கருவியையும் இந்தியர்கள் விரைவில் பெறவிருக்கிறார்கள்.
இதயத்தில் ஏற்படும் அடைப்பை குணப்படுத்துவதற்கு தற்போது வெளிநாட்டுகளிலிருந்து கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்டென்ட் கருவியின் விலை இறக்குமதி செய்யப்படும் கருவிகளை விட மிகவும் குறைவானதாக இருக்கும். இதேபோல் ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும் போது ரத்தத்தின் போக்கை கட்டுப்படுத்துவதற்கான கருவி இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னார்வ நிறுவனமாக இயங்கும் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் தேசிய விண்வெளி ஆய்வகம், பெங்களூருவுடன் இணைந்து தயாரித்த இரண்டு உயிரி மருத்துவ உட்பொருத்து கருவிகளுக்காக அந்த நிறுவனம் புனேவில் இயங்கும் பயோராட் மெடிசிஸ் என்ற நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.