வரலாறு திரும்புது - இந்திய தயாரிப்பு போர் விமானம் வாங்க அமெரிக்கா உட்பட 6 நாடுகள் ஆர்வம்!

Update: 2022-08-06 06:09 GMT

இந்தியாவில்  தயாரிக்கப்படும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளன என, ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.

பார்லிமெண்டில் பேசிய அவர், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா,ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வமாக உள்ளன. 

மலேஷியா 2019ஆம் ஆண்டிலேயே தேஜஸ் போர் விமானங்களுக்கு ஆர்டர்'கொடுத்து உள்ளது என்றார். மலேஷியா தற்போது பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் 'மிக் 29' ரக போர் விமானங்களை,  அவர்களுடைய ராணுவத்தில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒற்றை இன்ஜின் கொண்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.

தேஜஸ் என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறைவான எடையுள்ள பல்பணி ஜெட் ஃபைட்டர் ஆகும். இது வால் இல்லாத ஒற்றை இன்ஜின் ஆற்றல் கொண்ட சேர்ம முக்கோண இறக்கை வடிவமைப்பை உடையதாகும்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோவாவில் நடைபெற்ற அதன் கடல் மட்ட விமானப் பரிசோதனையின் போது தேஜாஸ் மணிக்கு 1,350 கிமீட்டருக்கும் மேல் சென்றது. ஆகையால் அது இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டடால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சூப்பர்சோனிக் ஃபைட்டர் என்ற பெருமையைப் பெற்றது. 

Input From: Dinamalar

Similar News