கோவாக்சின் 77.8% செயல்திறன் கொண்டது - பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!

Update: 2021-07-03 12:43 GMT

உலக நாடுகள் பல தங்கள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை முழுவதும் நம்பி இருக்கிறார்கள். ஏனென்றால் உள்நாட்டு உற்பத்தியில் அதிக பாதுகாப்பையும் மற்றும் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்தது என்ற பெருமையை கொண்டுள்ளது. எனவே அங்கு உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அந்த தடுப்பூசி ஆனது உற்பத்தி செய்யப்படுகின்றது ஒரு தனி சிறப்பு. அந்த வகையில் தற்பொழுது இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் 77.8% செயல்திறன் கொண்டது என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.


கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது, கட்ட பரிசோதனை முடிவின்படி, கொரோனா தொற்று பாதித்த 130 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 77.8% கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக சார்ஸ் கொரோனா-2, டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2 சதவீதமும், தீவிர கொரோனா தொற்றுக்கு எதிராக 93.4%மும் செயல்திறனுடன் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பா நாடுகளிடம் அங்கீகாரம் கோரியுள்ள நிலையில், மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டிருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்வது மத்திய அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.

Similar News