எந்த ஆட்சியிலும் இப்படி நடத்ததில்லை - ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த 9 ஆண்டுகளில் 300 மடங்குகள் வளர்ச்சி!
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த 9 ஆண்டுகளில் 300 மடங்குகள் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டிற்கு முன்பாக 350 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பு ஸ்டார்ட்-அப் திட்டத்தின் மூலம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
விண்வெளித்துறையில் தனியார் துறையினரும் பங்கேற்க பிரதமர் மோடி அனுமதித்த நிலையில் வெறும் 3 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இடம்பெற்றதாக அவர் கூறினார். அதேபோல் உயிரி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 50-லிருந்து சுமார் 6,000-ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் மூலம் நாடு வளர்ச்சியடைகிறது. வலிமையான புதுமைக்கண்டுபிடிப்புகள் சூழலைக் கட்டமைக்க சாகர்மாலா புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்-அப் வரைவுக்கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியடைந்து வரும் கடல்சார் துறையின் எதிர்காலத்திற்காக ஸ்டார்ட்-அப் மற்றும் இதர நிறுவனங்களை தோற்றுவிக்கும் வகையில் இந்த வரைவுக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டில் ஸ்டார்ட்-அப் மற்றும் புதுமைக்கண்டுபிடிப்புகளை வலிமையான சூழலுக்கேற்ற வகையில் மாற்றியமைக்க தமது அமைச்சகம் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.
Input From: PMindia