மகராஷ்டிராவிற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் SII நிறுவனம்: மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
இந்தியாவில் தற்போது அதிகரித்துவரும் தொற்றின் காரணமாக தடுப்பூசிகளின் தேவையும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, 1.5 கோடி கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் மகாராஷ்டிராவுக்கு மே மாதம் 20 தேதிக்குப் பிறகு வழங்குவதாக, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு உறுதியளித்துள்ளார் என்று சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார். கொரோனா நிர்வாகம் குறித்து விவாதிக்க மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை நேற்று ஒரு கூட்டத்தை நடத்தியது.
மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் இதுபற்றி கூறுகையில், "சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா(SII) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, 1.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மே 20க்குப் பிறகு மகாராஷ்டிராவுக்கு வழங்குவதாக முதலமைச்சருக்கு உறுதியளித்துள்ளார். அதன்பிறகு நாங்கள் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட உள்ளோம்" எனக் கூறினார். தடுப்பூசிகள் கிடைக்காத காரணத்தால் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மட்டும் தற்காலிகமாக மகாராஷ்டிரா இடைநிறுத்தியுள்ளதால், சுகாதார அமைச்சர் கூறினார்.
அனைத்து வயதினருக்காக மாநில அரசு வாங்கிய அளவுகள் தடுப்பூசிகள் இப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்த வேண்டும். மத்திய அரசு அதன் இறக்குமதி சட்டங்களை சிறிது தளர்த்தினால், நாங்கள் 3 முதல் 4 மாதங்களில் மக்களுக்கு தடுப்பூசி போட முடியும் எனக் கூறினார்.