உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத்தண்டனை - நிறைவேறியது மசோதா.!

உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத்தண்டனை - நிறைவேறியது மசோதா.!

Update: 2020-11-28 19:37 GMT

உத்தரபிரதேசத்தில்  மாநிலத்தில் மதம் மாற்றும் நோக்கத்துக்காக சிலர் பொய்யான செயற்கை காதல்களில் ஈடுபட்டு வேறொரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்களுக்கு வலைவீசினர். இன்னொரு பக்கம் காதலில் வீழ்ந்தவர்கள் எந்தவித ஆன்மீக சிந்தனைகளின் அடிப்படையில் இல்லாமல் மதம் மாறினார். 

இந்த வகை மத மாற்றத்தை தடுக்கவும், லவ் ஜிகாத்தை தடுக்கும் வகையிலும் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. 

இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

இதையடுத்து, நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், லவ் ஜிகாத் ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து, லக் ஜிகாத் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என அவசரச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும், 

மேலும் திருமணத்துக்காக மதம் மாறினாலும் மதம் மாறிய பெண் தன்னுடைய மதத்தை மாற்ற விரும்பினாலும் அது சட்டப்படி ஏற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரிபுரா மாநிலத்திலும் பல்வேறு அமைப்புகள் லவ்ஜிகாத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் வேண்டும் என போர் கொடி தூக்கியுள்ளன. 

Similar News