பெங்களூருவில் 103 வயது மூதாட்டி உற்சாகமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பெங்களூருவில் 103 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பெங்களூருவில் 103 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான மூத்த குடிமக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு நகரில் வசிக்கும் ஜே.காமேஷ்வரி என்ற 103 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். தடுப்பூசி போடும்போது உற்சாகமுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று இவர் இந்தியாவின் மிக மூத்தவர் என்பது தரவுகளின் அடிப்படையில் கூறப்படுகிறது.