1034 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை வழக்கு - நள்ளிரவு 12 மணிக்கு சஞ்சய் ராவத்தை தூக்கிய அமலாக்கத்துறை
நில மோசடி வழக்கில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில மோசடி வழக்கில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி'யுமான சஞ்சய் ராவத் மீது 1,034 கோடி ரூபாய் மோசடி வழக்கு உள்ளது. இதில் சட்ட விரோதமாக நடந்த பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த ஜூலை 1ம் தேதி முதலே அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். 20ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்துக்கு இரண்டு முறை சமன் அனுப்பப்பட்டது, ஆனால் அதில் அவர் ஆஜராகவில்லை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் அதில் அவர் ஆஜராக இல்லை என அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் மும்பை புறநகர் பகுதியான உள்ள சஞ்சய் ராவத் வீட்டுக்கு நேற்று காலை 7 மணி அளவில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்றனர். பின்னர் அவர் வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர் வீட்டில் இருந்த சஞ்சய் ராவத்திடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் சஞ்சய் ராவத் நேற்று இரவு 12 மணி அளவில் கைது செய்யப்பட்டார்.