உத்திரபிரதேசத்தில் என்கவுண்டர்கள் மூலம் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர் - கெத்தாக அறிவித்த யோகி ஆதித்யநாத்

உத்திரபிரதேசத்தில் என்கவுண்டர்கள் மூலம் 166 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Update: 2022-10-22 13:31 GMT

உத்திரபிரதேசத்தில் என்கவுண்டர்கள் மூலம் 166 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

காவலர் தினத்தை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் பணியின் போது உயர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் பேசியதாவது, 'நாட்டின் பாதுகாப்பை பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது' என பேசினார்.

மேலும் தொடர்ந்து அவர் கடந்த ஐந்தாண்டுகளில் உத்தரபிரதேச காவல்துறையினர் நடத்திய என்கவுண்டர்களின் 166 குற்றவாளி கொல்லப்பட்டன 4,453 பேர் காயம் அடைந்தனர் காவல்துறையின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன் என்றார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க தலைமையின் அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் கூறினார் மேலும் அவர்களுக்கு பல நலத்திட்டங்களையும் அறிவித்தார்.


Source - Maalai malar

Similar News