பொய் செய்தியை வெளியிட்டு மத சண்டைக்கு வழிவகுத்த 2 பெண் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு!
சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீதும் கோயில்கள் மீது வன்முறைகளை முஸ்லீம்கள் கட்டவிழ்த்து விட்டனர். இதில் பல கோயில்கள் மற்றும் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீதும் கோயில்கள் மீது வன்முறைகளை முஸ்லீம்கள் கட்டவிழ்த்து விட்டனர். இதில் பல கோயில்கள் மற்றும் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டனர். இதனை கண்டிக்கும் விதமாக திரிபுரா மாநிலம், தர்மநகர் மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது அப்போது சிலரால் வன்முறை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே கோமதி மாவட்டத்தில் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் பரவியது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மசூதி எதுவும் சேதப்படுத்தப்படவில்லை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக (இரண்டு சமூகத்துக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும்) செய்திகளை வெளியிட்டதாக பெண் பத்திரிகையாளர்களான சம்ரிதி சகுனியா, ஸ்வர்ணா ஐ ஆகியோருக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் புகார் கொடுத்தது. இதனை தொடர்ந்து இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் மீது இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களிடம் விரோதபோக்கை தூண்டுவதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது போன்று பொய்யான தகவல்களை செய்தியாக இந்தியாவில் பல ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வெளியிடுகிறது. இது போன்று வெளியிடும் செய்தியால் வெவ்வேறான சமூகங்களுக்கிடையில் சண்டை எழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே பொய்யான செய்திகளை பரப்புவதை விட உண்மையான செய்திகளை மக்களிடம் சென்றால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
Source: Hindu Tamil
Image Courtesy:Avast Blog