2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் வந்த கொள்கை மாற்றம்.. பிரதமர் மோடியால் நிகழ்ந்த அதிசயம்..
பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனே மெட்ரோவின் முடிக்கப்பட்ட பிரிவுகளைத் தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் மெட்ரோ ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் கட்டப்பட உள்ள சுமார் 1190 பி.எம்.ஏ.ஒய் வீடுகளுக்கும், புனே பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்படும் 6400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பி.சி.எம்.சி.யின் கீழ் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலையையும் பிரதமர் திறந்து வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 2014 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் கொள்கையை மாற்றினோம் என்று பிரதமர் கூறினார்.
இதையடுத்து கடந்த 9 ஆண்டுகளில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏழைகளுக்காக 4 கோடிக்கும் அதிகமான வீடுகளை அரசு கட்டியுள்ளது என்றும், நகர்ப்புற ஏழைகளுக்காக 75 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார். கட்டுமானத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை, அவற்றின் தரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்தார். நாட்டிலேயே முதன்முறையாக இன்று பதிவு செய்யப்பட்ட வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வீடுகளின் விலை பல லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் கோடிக்கணக்கான பெண்கள் இப்போது 'லட்சாதிபதி'களாக மாறியுள்ளனர் என்று உறுதிபடக் கூறினார். புதிய வீடுகளைப் பெற்ற அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார. "ஏழைகளாக இருந்தாலும், நடுத்தர குடும்பமாக இருந்தாலும், அனைத்துக் கனவையும் நிறைவேற்றுவது மோடியின் உத்தரவாதம்" என்று அவர் கூறினார். ஒரு கனவை நனவாக்குவது பல தீர்மானங்களின் தொடக்கமாக அமைகிறது. அது அந்த நபரின் வாழ்க்கையில் ஓர் உந்து சக்தியாக மாறுகிறது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
Input & Image courtesy: News