2021 இந்திய இராணுவத்தின் ஆட்சேர்ப்பு பேரணி தொடக்கம்.!

2021 இந்திய இராணுவத்தின் ஆட்சேர்ப்பு பேரணி தொடக்கம்.!

Update: 2021-01-10 14:26 GMT

இந்திய இராணுவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள பதவிகளைப் பெறவிரும்பும் நபர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய இராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான பேரணியை மாநிலம் முழுவதும் பேரணிகளை நடத்த இந்திய இராணுவம் தொடங்கியுள்ளது. அந்தந்த மாநிலங்களில் இருக்கும் தகுதி இருக்கும்  இராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் ஆட்சேர்ப்பிற்கான பேரணிக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான அனைத்து தகவல்களும் இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய இராணுவத்தில் உள்ள MTS, சமையல்காரர், ஓட்டுநர் போன்ற பதவிகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு பேரணி இந்திய இராணுவத்தால் நடத்தப் படுகின்றது. மேலும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் பிப்ரவரி 1 2021 குள் இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ஹிமாச்சல் பிரதேசத்தில் இந்திய இராணுவத்தால் ஹமிர்பூர், பிலாஸ்பூர் மற்றும் உணா மாவட்டங்களில் பேரணி நடத்தப் படுகின்றது. மார்ச் 1 2021 இல் உனா மாவட்டத்தில் இருந்து தொடங்கப்படுகின்றது. இந்த ஆட்சேர்ப்பு விண்ணப்பத்துக்கான கடைசி நாள் பிப்ரவரி 13,2021. 

இந்த ஆட்சேர்ப்பு மூலம் ஸ்டோர் கீப்பர், நர்சிங் உதவியாளர், சோலிடேர் டெக்னிகல் மற்றும் டிரேட்ஸ்மேன் போன்ற பதவிகளுக்குப் பணி நியமனங்கள் அளிக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்துக்குத் தகுதி உடையவர்கள் 8, 10 மற்றும் 12 படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்யக் கடைசி நாள் ஜனவரி 18 2021 ஆகும். இதுகுறித்த மேலும் தகவல்களை அறிய விண்ணப்பதாரர்கள் இந்திய இராணுவத்தின் வலைத்தளத்தை அணுகலாம். 

இந்திய இராணுவத்தின் சார்பாக ஜனவரி 18 2021 மற்றும் பெப்ரவரி 28,2021 இல் தெலங்கானாவில் செகந்திராபாத்தில் ஆட்சேர்ப்பு பேரணி நடத்தப் படுகின்றது. இந்த ஆட்சேர்ப்பு பேரணியில் எந்த மாநிலத்தில் உள்ள நபர்களும் கலந்து கொள்ளலாம். இது குறித்து இந்திய இராணுவம் தனது வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அசாமில் இந்திய இராணுவ சார்பாக ஜோர்ஹட், மஜூலி, தின்சுகியா, திப்ருகார், சிவாசாகர் மற்றும் வடக்கு லாஹிம்பூரில் மாவட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Similar News