2026-27-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் - ரூ 10,900 கோடி மதிப்பில் உருவாக்கம்!
உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய இயற்கை வளங்களுக்கு ஏற்ற சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்குவதற்கும், சர்வதேச சந்தைகளில் இந்திய உணவுப் பொருட்களை ஆதரிப்பதற்கும் ரூ 10,900 கோடி மதிப்பிலான இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட, குறைந்தபட்ச விற்பனையுடன் கூடிய உணவு தயாரிப்பு நிறுவனங்களை ஆதரித்து, அவற்றின் திறனை அதிகரிப்பதற்காக குறைந்தபட்ச மற்றும் குறிப்பிட்ட முதலீட்டை செய்தல், வலிமை மிகுந்த இந்திய வணிகப்பெயர்களை உருவாக்குவதற்காக வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்களை பிரபலப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
முட்டை, பண்ணை இறைச்சி, முட்டை பொருட்கள் போன்ற பல்வேறு சிறு மற்றும் குறு நிறுவனங்களின் புதுமையான/இயற்கை பொருட்களும் இப்பிரிவின் கீழ் வரும்.
இந்திய நிறுவனங்களை வெளிநாடுகளில் பிரபலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்காக 2021-22 முதல் 2026-27 வரையிலான ஆறு அண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலமாக உணவுப்பதப்படுத்துதல் திறன் ரூ 33,494 கோடியாக விரிவடையும். 2026-27-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அமைச்சரவை செயலாளர் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு இத்திட்டத்தை மத்திய அளவில் கண்காணிக்கும்.
பயனாளிகளுக்கு உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும். மூன்றாம் நபர் மதிப்பீடு மற்றும் ஆய்வு நடவடிக்கை செயல்படுத்தப்படும்.