அரசாங்கத்துடன் இளைஞர்கள் சேர்ந்து செய்யாற்ற வேண்டும் - மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வேண்டுகோள்!
26வது தேசிய இளையோர் விழாவில் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.
கர்நாடக மாநிலம் தார்வாடில் நிறைவடைந்த 26-வது தேசிய இளையோர் விழாவில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, மற்றும் தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பல்வேறு முக்கிய விவகாரங்களில் தீர்வுகளுடன் G20 தலைவர்களுக்கான ஆவணங்களை தயாரிக்கவும், இளைஞர்களுக்கான Y-20 உரையாடல்கள், Y-20 விவாதங்களில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.
தூய்மையான, அழகான, அதிகாரமிக்க நாட்டை கட்டமைப்பதற்கான அரசின் முன்னெடுப்புகளில் இளைய தலைமுறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இளைஞர்களின் நலனுக்காக நரேந்திர மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய அனுராக் சிங் தாக்கூர், நாட்டை கட்டமைப்பதில் இதனை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றார்.
அனைத்து துறைகளிலும், நாடு வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக 2019-20ம் ஆண்டுக்கான தேசிய இளையோர் விருது 19 தனி நபர்களுக்கும், 6 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டன. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் இளைஞர்களின் துடிப்புமிக்க ஆற்றலுடன் இந்தியாவில் வளர்ந்த நாடுகள் ஒன்றாக இணைப்பதற்காக முயற்சி நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: News