தூய்மை கங்கை திட்டம் உட்பட 12 திட்டங்களுக்கு ஒப்புதல்: ரூ.2,700 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு!

ரூ.2,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு கங்கைத் தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2022-12-27 12:04 GMT

கங்கைத் தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் 46-வது செயற்குழு கூட்டம் தலைமை இயக்குநர் திரு. அசோக்குமார் தலைமையில் 23 டிசம்பர் அன்று நடைபெற்றது. அப்போது உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ரூ 2,700 கோடிக்கு மேலான செலவில் கழிவு நீரகற்று உள்கட்டமைப்பின் 12 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


உத்தரப்பிரதேசத்தில் 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பிரயாக்ராஜில் ரூ. 475.19 கோடி செலவில் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பீகாரில் ரூ. 42.25 கோடி செலவில் தௌத் நகரிலும், 149.15 கோடி செலவில் மோத்திகரிலும் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.


மேற்கு வங்கத்தில் ரூ. 653.67 கோடி செலவில் ஆதிகங்கா ஆற்றின் மறுசீரமைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உத்தரகண்ட் மற்றும் பீகாரில் 2022-23-ம் ஆண்டு காடுவளர்ப்பு திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News