தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து.. விரைவில் மருந்து கடைகளில் கிடைக்கும்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக 3 லட்சத்திற்கும் அதிகமான தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது.
இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் முழுஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஒரு சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்த போதிலும் இறப்பு எண்ணிக்கையும் தினசரி 4 ஆயிரத்தை தொடுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் தயாரான சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாசிக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. அது தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வரஉள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. டி-டியோக்ஸி டி-குளுகோஸ் என்ற அழைக்கப்படும் மருந்துக்கு அவசரகால பயன்பாட்டுக்காக அனுமதியும் அளித்துள்ளது.
இந்த மருந்து தடுப்பூசி போன்று அல்லாமல் பவுடர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தண்ணீரில் கலக்கி குடித்தால் போதும் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். தற்போது 2 கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்குக் இந்த மருந்தை அளித்ததில் தொற்றில் இருந்து வேகமாக குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது 3ம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.
இந்த மருந்தை உட்கொள்ளும்போது, வைரஸ் உருவாகாமல் தடுக்கிறது. வைரஸால் பாதிக்கப்படும் செல்களை அழிக்கிறது. அடுத்த வாரம் முறைப்படி அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மருந்து வெற்றிகரமாக அமைந்தால் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் இல்லாத நாடாக உருவெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.