3 மணி நேரம், 50 கிலோ மீட்டர், வழியெங்கும் லட்சக்கணக்கான மக்கள் - குஜராத்தை புரட்டிப்போட்ட பிரதமர் மோடியின் மெகா சாலை பேரணி
மூன்று மணி நேரத்தில் 50 கிலோமீட்டர் மெகா ரோட் ஷோ பயணம் நடத்தியுள்ளார் பிரதமர் மோடி.;
மூன்று மணி நேரத்தில் 50 கிலோமீட்டர் மெகா ரோட் ஷோ பயணம் நடத்தியுள்ளார் பிரதமர் மோடி.
குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது, முதல் கட்ட தேர்தல் நேற்று முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் இரண்டாம் தேதி நடக்க உள்ளது. அதற்காக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று மிகப்பெரிய சாலை பேரணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் சென்ற வாகன பிரச்சாரத்தில் அவருடன் ஏராளமான நிர்வாகிகள் சென்றனர், மொத்தம் 16 தொகுதிகள் பிரச்சாரம் மேற்கொண்டார் அகமதாபாத்தில் நரோத்தாகாமில் இருந்து தொடங்கிய பிரச்சார பேரணி காந்திநகர் தெற்கு தொகுதியில் நிறைவடைந்தது.
மூணு மணி நேரம் 50 கிலோமீட்டர் தூரம் சென்று பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி. இந்த பிரச்சாரத்தின் போது வழியில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற முக்கிய தலைவர்களின் நினைவிடங்களில் சிறிது நேரம் நிறுத்தி வழிபாடு செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.
2017 சட்டமன்ற தேர்தல் 99 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் குஜராத்தில் ஏழாவது முறை ஆட்சியைப் பிடிக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.